வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 99 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 99 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
X

பைல் படம்.

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 99 பேர் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தி அவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் நேற்று வரை பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 99 பேர் விமானம் மூலம் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் வீடுகளில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கி இருக்கும் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இதையடுத்து, ஒரு வாரம் கழிந்ததும் மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் அவர்களுக்கு பாதிப்பில்லை என்று முடிவு வந்தால் அவர்கள் வெளியே நடமாடலாம்.பாதிப்பு என்று முடிவு உறுதியானால், உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும். மேலும் அவர்களுக்கு எந்த வகையான வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக அவர்களது சளி, ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!