வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 118 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 118 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
X

பைல் படம்.

வெளிநாட்டில் இருந்து ஈரோடு வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யபப்பட்ட நிலையில், ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை என தகவல்.

ஒமிக்ரான் பரவல் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 183 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 65 பேருக்கு, 2-வது கட்டமாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆண்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, இருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறிவதற்காக சென்னையில் ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பபட்டது. பரிசோதனையின் முடிவில், ஒமிக்ரான் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 118 தொடர்ந்து வீட்டு தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு, இரண்டாவது கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai future project