வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 36 பேர் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு

வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 36 பேர் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு
X

பைல் படம்.

வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 360 பேர் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் சுகாதார துறையினர் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி,கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் நேற்று வரை 360 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் 324 பேருக்கு 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை முடிவு என வந்துள்ளது. மேலும் 36 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் 2-ம் கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!