தாளவாடி அருகே சோதனைச்சாவடியில் இரும்பு கேட் உடைப்பு: போலீசார் விசாரணை

தாளவாடி அருகே சோதனைச்சாவடியில் இரும்பு கேட் உடைப்பு: போலீசார் விசாரணை
X

சேதமடைந்த இருப்பு கேட்.

தாளவாடி அருகே காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் உள்ள இரும்பு கேட்டை உடைத்த லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் அதிக உயரமுள்ள வாகனத்தை கணக்கிட இரும்பினால் தடுப்பு கேட் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு தாளவாடியிலிருந்து சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி காரப்பள்ளம் சோதனையில் கணக்கிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு சென்றது. லாரியானது சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள ஆசனூர் வரை சென்றது. இதனையடுத்து லாரியை பின்தொடர்ந்து சென்ற சோதனைச்சாவடி அதிகாரிகள் லாரியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture