ரேஷன் விற்பனையாளர், கட்டுநர்கள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு

ரேஷன் விற்பனையாளர், கட்டுநர்கள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

Kadai Thirappu Vizha Invitation in Tamil-ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் விற்பனையாளர், கட்டுநர்கள் பணிக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; டிசம்பரில் நேர்முகத் தேர்வு நடக்கிறது.

Kadai Thirappu Vizha Invitation in Tamil-தமிழ்நாட்டில், பொது விநியோக திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தவகையில் தற்போது ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன் படி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பொது விநியோக திட்டத்தை செயல்படுத்தும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 233 விற்பனையாளர்கள், 10 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு இன்று(13ம் தேதி) முதல் ஆன்லைனில் விணணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 150 விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். www.drberd.in என்ற இணையதளத்தில் முழுவிபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலி யாக உள்ள 233 விற்பனையாளர்கள், 10 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு இன்று (13ம்தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேர்முக தேர்வு டிசம்பரில் நடைபெறுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது." என்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:-

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் www.drberd.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும் என்பதை அறியவும்.விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் கீழ்க்கண்டவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும்.விண்ணப்பப் படிவங்கள் இணையதளம் மூலம் முழுமையாகப் செய்யப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பதாரரின் புகைப்படம் -50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format) ,

விண்ணப்பதாரரின் கையெழுத்து - 50 kb அளவுக்கு மிகாமல்( jpeg or jpg format)

விண்ணப்பதாரரின் சாதிச்சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதிக்கான சான்றிதழ் - 200kb அளவு(pdf file)

குடும்ப அட்டை (அல்லது) வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை 200kளவுக்கு மிகாமல் (pdf file)

"SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருப்பின் அந்த இரசீது - 100 kb அளவுக்கு மிகாமல் (pdf file) (அல்லது) ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தியிருப்பின் | (DRB Copy of the pay-in-slip) பதிவேற்றம் செய்யப்படவேண்டும் - 100 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்குமிகாமல் (pdf file)

ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்த முறை விண்ணப்பிக்கும் போது கடந்தமுறை அளித்த விண்ணப்ப நகல் / வங்கி செலான் / நேர்முகத் தேர்விற்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்று - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file).

தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் (அரசாணை (நிலை) எண் 82 மனிதவள மேலாண்மை (எஸ்) துறை, நாள் 16.08.2021 இன் இணைப்பில் உள்ளபடி ) - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) .

முன்னுரிமை கோரும் இனத்திற்கான/ இனங்களுக்கான சான்றிதழ்- 200 kb | அளவுக்கு மிகாமல் (pdf file)

நேர்முகத்தேர்வு :

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும். நேர்முகத் தேர்விற்கு அழைப்புக் கடிதம் பெற்ற விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தங்கள் சொந்த செலவில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்படவுள்ள நபர்களின் பெயர்ப் பட்டியல் www.drberd.in என்ற மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.நேர்முகத் தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் (EMail) / குறுஞ்செய்தி (SMS) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்களை, விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அழைப்புக் கடிதத்துடன் வராதவிண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். ஈ) நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் மதிப்பு (weightage for academic marks) மற்றும் நேர்முகத் தேர்வில் அளிக்கப்பட்ட சராசரி மதிப்பெண்கள் முறையே 50:50 என்ற விகிதத்தில் இருக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்