அந்தியூரில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்

அந்தியூரில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்
X

அந்தியூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

அந்தியூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி அலுவலகத்தில், அந்தியூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், அனைத்து வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் டிஎஸ் மீனாட்சிசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல், மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் குருராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சண்முகானந்தம், பாலுச்சாமி, ஹோட்டல் கிருஷ்ணன், இளைஞரணி பார் மோகன், வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளர் ராஜா சம்பத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!