108 ஆம்புலன்ஸ் வேலை வாய்ப்பு: ஈரோட்டில் நவ.30ம் தேதி நேர்முகத் தேர்வு

108 ஆம்புலன்ஸ் வேலை வாய்ப்பு: ஈரோட்டில் நவ.30ம் தேதி நேர்முகத் தேர்வு
X

108 ஆம்புலன்ஸ்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு வரும் 30ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு வரும் 30ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

ஈரோடு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணர் மற்றும் ஓட்டுநர் பணியிடத்துக்கு வரும் நவ.30ம் தேதி காலை 11:30 மணி முதல் 2 மணி வரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் நேர்முகத் தேர்வு நடக்கிறது.

அவசர கால மருத்துவ நுட்புணர் பணிக்கு அடிப்படைத் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு தேர்வு அன்று 19க்கு குறையாமலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.16,020 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

ஓட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். ஆண், பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேஜ் வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். *மாத ஊதியம் ரூ.15,820 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

ஓட்டுநர் பணிக்கு எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு மனித வளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். அவசர கால மருத்துவ நுட்புணர் பணிக்கு எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனித வளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில், தேர்வு செய்யப்படுபவர்கள் 45 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மேலும், விவரங்கள் அறிய 044-28888060, 7397724813 , 73388 94971,89259 41108 எண்களை தொடர்பு கொள்ளலாம்.‌ இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?
108 ஆம்புலன்ஸ் வேலை வாய்ப்பு: ஈரோட்டில் நவ.30ம் தேதி நேர்முகத் தேர்வு
சுகர் , பிபி இருந்தா உடனே குறைக்க ட்ரை பண்ணுங்க ..இல்லனா ஸ்ட்ரோக் வருமாமா !.
5ஜி யூசர்க்கான 50 நாட்கள் வேலிடிட்டி பேக் அறிமுகபடுத்தியது ஜியோ நிறுவனம்!
ஆஃபிஸில் வேலை செய்யும்போது தூக்கம் வருதா..? இந்த  விஷயங்கள் இனி ஃபாலோ பண்ணுங்க..!
ஸ்வீட் சாப்டா முகப்பருக்கள் வருமா ? அச்சச்சோ ...! உடனே வேறு என்ன பிரச்சனைலா இருக்குனு  தெரிஞ்சுக்கோங்க !
லேப்டாப் பேட்டரி எப்படி பாதுகாக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க | how to check battery health in laptop
உங்க தலைமுடி சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வுகாண இந்த தக்காளி யூஸ் பண்ணுங்க.. அது போதும்..!
வெயிட் லாஸ் பண்ணனும்னு நெனச்சா இந்த சீரகத்தை இப்டி ட்ரை பண்ணுங்க..! இதுல  எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரியுமா?
ஜிமெயில் ல ஸ்டோரேஜ் பிரச்சனைக்கு தீர்வு கெடச்சுருக்கு  இத பண்ணி பாருங்க | Simple Ways to Fix Gmail Storage Full Problem
வீட்டுக்குள்ள இப்படி நடந்தாலே எடை குறைஞ்சு ஹெல்தியா இருப்பீங்களாமே.. அப்படி என்னதான் பண்ணனும் பாக்கலாமா...?
நவ.29ம் தேதி அனைத்து கடைகளும் இயங்கும்: ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!