சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா
X

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கடம்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று (டிச.3) கொண்டாடப்பட்டது.

Erode Live Updates, Erode Today News, Erode News - சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று (டிச.3) கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கடம்பூர் மலைப்பகுதியில் செயல்படும் பரண் நிறுவன அரங்கில் ஈரோடு சுக்ரா அறக்கட்டளை இயக்குனர் அசோக் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான போர்வை, துணி, உணவு பொருட்கள் மசாலா பொருட்கள் தலா ரூ 5,000 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியை ஈரோடு கூடுதல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். இதில், மாற்றுத்திறனாளிகள் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் என சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் கர்ண காமராஜ் நன்றி கூறினார்.

Next Story