ஈரோடு நகரில் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பிரகாஷ்
ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு நகரில் திமுக வேட்பாளர் பிரகாஷ் இறுதிக் கட்ட அனல் பறக்கும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்தியா முழுவதும் மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிப்பு கடந்த மாா்ச் 16ம் தேதி வெளியிடப்பட்டது. தோ்தல் அட்டவணைப்படி, தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே அதாவது ஏப்.,19 ல் (நாளை மறுநாள்) தோ்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப்.,17) இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதையடுத்து, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகளின் தலைவா்களும், வேட்பாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக கே.இ.பிரகாஷ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, வாக்கு சேகரித்து வந்தார்.
அதன்படி, இறுதி நாளான இன்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி சூரம்பட்டி, டீசல்செட், மணல்மேடு உள்ளிட்ட பகுதியில் கூட்டணி கட்சியினருடன் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அவருடன் பெரியார் நகர் பகுதிகளுக்கு செயலாளர் அக்னி சந்துரு, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில், மண்டல தலைவர் பழனிச்சாமி உட்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu