ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
X

பைல் படம்.

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என மாநகராட்சி பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்கள் குறித்து மாநகராட்சி தகவல் சேகரித்து வருகிறது. அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர் வசித்து வரும் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதனையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவின்படி மாநகர் நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சியில் பல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மழை நீர், குடிநீர் ஆகியவை வீடுகளை சுற்றி தேங்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என்று மாநகராட்சி பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.


இதேபோல் , கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்டபகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களைக் கொண்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story