மைலம்பாடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை கலந்துரையாடல் கூட்டம்

மைலம்பாடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை கலந்துரையாடல் கூட்டம்
X

மைலம்பாடியில் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்.

மைலம்பாடியில் தனியார் வேளாண்மை கல்லூரி சார்பில் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், மைலம்பாடியில் தனியார் வேளாண்மை கல்லூரி சார்பில் மக்காச்சோளம் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மைலம்பாடி கிராம விவசாயிகளுக்கு அமெரிக்கன் படைப்புழு பயிர் தாக்குதல் பற்றியும், அவற்றினை தடுப்பதற்கான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றியும் முன்னாள் துணை இயக்குனர் வேளாண்மை மற்றும் குமரகுரு வேளாண்மை கல்லூரி துணை பேராசிரியர் இணைந்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

இக்கூட்டத்தில் வானவராயர் வேளாண்மை கல்லூரி மாணவர்களும், குமரகுரு வேளாண்மை கல்லூரி பணி அனுபவ திட்ட மாணவிகளும் பங்கேற்று விஷப்பொறி மற்றும் அமெரிக்கன் படைப்புழு ஆண் இனக்கவர்ச்சி பொறியினை பயன்படுத்தும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விவரித்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு