சாலை விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது

சாலை விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது
X
தீயணைப்பு துறையினர் 30லட்சத்திற்கான‌ காசோலையை வழங்கிய போது எடுத்த படம்
பவானி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி மேட்டூர் சாலையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் நிலை அலுவலகத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தீயணைப்புத்துறை மேற்கு மண்டல இணை இயக்குனர் சத்தியநாராயணன் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்கள் பங்கேற்று, மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 2020ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் சிலம்பரசன் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் காசோலையை அவரது தந்தை மற்றும் மனைவியிடம் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் புளுகாண்டி,உதவி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம், பவானி தீயணைப்பு அலுவலர் மணி மற்றும் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடும் போது தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புடன் பணியாற்றுமாறு மேற்கு மண்டல இணை இயக்குனர் சக்தி நாராயணன் தீயணைப்பு வீரர்களுக்கு அறிவுறுத்தி சென்றார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு