ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
X

சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

சித்தோட்டில் உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா ஆகியோர் நேற்று (ஜன.18) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, ஈரோடு, சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா ஆகியோர் வாக்கு எண்ணும் அறைகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் வைப்பறைகள் மற்றும் ஊடக மையம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!