பெருந்துறை, கோபியில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆய்வு

பெருந்துறை, கோபியில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆய்வு
X

பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மாநில ஆணையாளர் லால்வேனா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவு, பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாநில ஆணையாளர் லால்வேனா இன்று (நவ.9) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவு, பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா இன்று (நவ.9) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவு, பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாநில ஆணையாளர் லால்வேனா இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், மற்றும் மருந்து சாதனங்கள் (மருத்துவ கையுறைகள்) தொடர்பான தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம், கொளப்பலூரில் செயல்பட்டு வரும் மருந்து சாதனங்கள் (மருந்து ஊசிகள்) தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் ஆய்வு கொண்டார். இதனையடுத்து, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, மற்றும் உதவி இயக்குநர் மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, இணை இயக்குநர் (மருந்து கட்டுப்பாடுத் துறை) கார்த்திகேயன், உதவி இயக்குநர் ராம்பிரபு, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.தங்க விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஈரோடு, நாமக்கல் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். நமது குழுவில் இணையுங்கள். Click Now

Tags

Next Story
உலகத்திலேயே அதிகமாக  இந்தியர்களுக்கு இதனால்தான் சுகர் வருதாம் ...! கவனமா படிங்க ...!