பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,172 கன அடியாக சரிவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,172 கன அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை பைல் படம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,449 கன அடியிலிருந்து 15,172 கன அடியாக குறைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.

நேற்று அணைக்கு நீர்வரத்து 20,449 கன அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 15,172 கன அடியாக குறைந்துள்ளது. மேலும், நீர் வரத்து அதிகரிப்பால் நேற்று 93.10 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று 95.49 அடியாக உயர்ந்துள்ளதால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2.39 அடி உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1,005 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!