பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 936 கன அடியாக சரிவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 936 கன அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து ஜூன்.26 இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,789 கன அடியிலிருந்து 936 கன அடியாக சரிந்தது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (ஜூன்.26) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,789 கன அடியிலிருந்து 936 கன அடியாக சரிந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணை மூலம் 2.47 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று (ஜூன்.25) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,789 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.26) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 936 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 58.63 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 58.93 அடியாக உயர்ந்தது. அப்போது, அணையில் நீர் இருப்பு 6.91 டிஎம்சியாக இருந்தது. மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 1.0 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil