அந்தியூர் பேரூராட்சியில் நாளை மறைமுகத் தேர்தல்

அந்தியூர் பேரூராட்சியில் நாளை மறைமுகத் தேர்தல்
X

பைல் படம்

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவர் மற்றும் உப தலைவருக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சிக்கு நடந்த முடிந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 13 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சி தலா ஒரு இடத்திலும், அதிமுக இரண்டு இடங்களிலும் மற்றும் சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றது. இவர்கள் அனைவரும் மார்ச் 2-ஆம் தேதி வார்டு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் திமுக 15வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள், அந்தியூர் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என அந்தியூர் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதையடுத்து அந்தியூர் பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக 3வது வார்டில் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கீதா சேகர் அறிவிக்கப்பட்டார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாண்டியம்மாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தலைமையின் இந்த திடீர் அறிவிப்பால் கொதிப்படைந்த திமுகவினர், மார்ச் 4ம் தேதி நடைபெற இருந்த பேரூராட்சித் தலைவர் மற்றும் உபதலைவருக்கான மறைமுக தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக பாண்டியம்மாளை அறிவிக்க வேண்டுமென திமுகவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்தியூர் பேரூராட்சித் தலைவர் மற்றும் உப தலைவர் பதவிக்கான மதிமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த பேரூராட்சித் தலைவர் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாது உறுப்பினரா? அல்லது தனிப்பெரும்பான்மையுடன் களத்தில் நிற்கும் திமுக வை சேர்ந்த வார்டு உறுப்பினர் பாண்டியம்மாளா? என நாளை தெரியவரும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!