ஆப்பக்கூடல் பேரூராட்சியில் நாளை மறைமுகத் தேர்தல்

ஆப்பக்கூடல் பைல் படம்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 5 வார்டுகளிலும், அதிமுக 6 வார்டுகளிலும், பா.ம.க, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு இடங்களையும் பிடித்தன.
பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 5-வார்டு உறுப்பினர் செல்வி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற இருந்த துணை தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்காததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
நாளை நடைபெற உள்ள துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக., திமு.க., பா.ம.க., உறுப்பினர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளனர். இதில் திமுக சேர்ந்த ரேவதி துணைத்தலைவர் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu