பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,354 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,354 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 3,354 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 3,354 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

அதன்படி இன்று (ஏப்.,30) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - .81.77 அடி ,

நீர் இருப்பு - 16.64 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 3,354 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 1,050 கன அடி ,

அரக்கன்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 150 கன அடி நீரும் என் மொத்தம் 1,050 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு - 16.00 மிமீ

Tags

Next Story