பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,100 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,100 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையிலிருந்து தற்போது 6,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,400 கன அடியாக இருந்த நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி 6,100 கன அடி யாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 3400 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்தமாக 6,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை பொறுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும். தண்ணீரின் அளவு அவ்வப்போது மாறுபடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!