பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22,778 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22,778 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 18,000 கன அடியில் இருந்து 22,778 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதாலும் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று இரவு 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 22,778 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.74 அடியாக உள்ளது. அணையிலிருந்து 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்படும். மேலும், அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா