கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா
X

கோபி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் இன்று 30 கவுன்சிலர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் கடந்த 19 ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 30 கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா கோபி நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் திமுக சார்பில் 14 கவுன்சிலர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 2 கவுன்சிலர்களும், அதிமுக சார்பில் 13 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலரும் வெற்றி பெற்றனர்.

அதைத்தொடர்ந்து கோபி நகராட்சி கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து இன்று காலை, 30 கவுன்சிலர்களுக்கும் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரேம் ஆனந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம், சுகாதார அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், மேலாளர் ஜோதி மற்றும் நகராட்சி அனைத்து துறை அலுவலர்கள் செய்து இருந்தனர். 1949 ம் ஆண்டு முதல் முறையாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் இது 11 வது முறையாக கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றுள்ளது.

நிகழ்ச்சியில் திமுக மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் காயத்திரி சீனிவாசன், பவானிசாகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜீவா ஓ.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!