சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.93 லட்சம்

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.93 லட்சம்
X

பண்ணாரி மாரியம்மன் கோயில் வளாகத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணியின் போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரொக்கம் ரூ.92 லட்சத்து 82 ஆயிரம் கிடைத்துள்ளது.

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரொக்கம் ரூ.92 லட்சத்து 82 ஆயிரம் கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி நேற்று (டிச.26) வியாழக்கிழமை நடைபெற்றது.


இந்த காணிக்கை எண்ணும் பணியில் பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அலுவலர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 20 உண்டியல்களில் மொத்தம் ரூ.92 லட்சத்து 82 ஆயிரத்து 46 ரூபாயை (ரூ.92,82,046 ரொக்கம்) பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மேலும், 437 கிராம் தங்கம், 608 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்ததாக பண்ணாரி மாரியம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!