ஈரோடு அருகே மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்ற பாசக்கார தம்பி

ஈரோடு அருகே மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்ற பாசக்கார தம்பி
X

சூரம்பட்டி காவல் நிலையம்.

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்றுவிட்டு, போலீசிடம் தம்பி சரணடைந்தார்.

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேல் மாடியில் விக்னேஷ் (வயது 28), இவரது தம்பி அருண்குமார் (23) வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் அவ்வப்போது ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு மது அருந்திக்கொண்டிருந்தபோது, ஏற்பட்ட தகராறில் அருண்குமார் தாக்கியதில், விக்னேஷ் உயிரிழந்தார். இதனையடுத்து, அருண்குமார் சூரம்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இச்சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!