ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 23-ந் தேதி தொற்று எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இந்நிலையில், இன்று மேலும் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஏற்கனவே 32 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று 2 பேர் வீடு திரும்பினர். இதனால் தற்போது 42 பேர் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். இனி வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!