ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் 879 கடைகளில் 12 ஆயிரம் கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்: ரூ.2.15 கோடி அபராதம் விதிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் 879 கடைகளில் 12 ஆயிரம் கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உணவு வளாக சோதனைகள், ஆய்வக பரிசோதனைகள் என பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம். உணவு பாதுகாப்பு தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும், மக்களுக்கும். உணவு நிறுவனங்களுக்கும் உணவு பாதுகாப்பு துறையின் அளிக்கப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சிறுதொழில் முதல் பெரிய ஆலை வரை உள்ள அனைத்து உணவு தொழில் நிறுவனங்களும் உரிமைச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். நடப்பு ஆண்டில் ஈரோடு உணவு பாதுகாப்பு துறையானது, அடிப்படை உரிம பதிவில் 31% சதவீதமும் மற்றும் மாநில பதிவில் 19 சதவீதமும் முன்னேற்றம் கண்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட குக்கிங் ஆயிலை திருப்பி மீட்டெடுத்து, அதை பயோ டீசலாக மாற்றுவதாகும். நடப்பு ஆண்டில் 94 மெட்ரிக் டன் ஆயில் கொள்முதல் செய்யப்பட்டு 64 மெட்ரிக் டன் பயோடீசல் ஆக மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை மற்றும் நிக்கோட்டின் அடங்கிய பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை ஆகியவற்றை முழுமையாக தடை செய்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இந்தப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல் சட்டவிரோதமாகும். நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 879 கடைகள் புகையிலை பொருட்கள் விற்பனையால் மூடப்பட்டு, மொத்தம் 12 ஆயிரம் கிலோ அளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பல்வேறு வகையான ஒட்டுமொத்த மற்றும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதில் 14 வகையான பாலித்தீன் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உணவகங்கள். பேக்கரி, மளிகை கடைகள், மற்றும் விற்பனை நிலையங்களில் மெல்லிய பாலித்தீன் பயன்படுத்துவதை தவிர்க்க, சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், பிளாஸ்டிக் கவர்கள் கண்டறியப்படும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. உணவை அசுத்தமாக உற்பத்தி செய்யும் போது நச்சுத்தன்மை உள்ள கிருமிகள் உருவாகிறது. இதனால் பல்வேறு நோய்களும் உயிரிழப்பும் நேரிடும் அபாயம் உள்ளது.
இதனை தடுக்க ஈரோடு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து உணவகங்களில் சோதனை மேற்கொண்டு உள்ளனர். அசுத்தமாக உற்பத்தி செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இது போன்ற உணவு குறைபாடுகளை வாட்ஸ் அப் மின்னஞ்சல் மற்றும் செயலி மூலம் பொது மக்கள் புகார் அளித்தால் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu