ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 27,351 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 27,351 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 27,351 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடந்த 27 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 29 லட்சத்து 45 ஆயிரத்து 660 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இதற்கிடையே நேற்று 28-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 579 மையங்களில் நடைபெற்றது. இந்த முகாம் பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்து 316 பேர் ஈடுபட்டனர்.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 351 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா