ஈரோட்டில் ஒரே மாதத்தில் 2,833வழக்குப்பதிவு: ரூ.2.20 லட்சம் அபராதம் வசூல்
ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்க ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் (அக்டோபர்) ஈரோடு பன்னீர் செல்வம் பார்க், அரசு மருத்துவமனை ரவுண்டானா,கலெக்ட்ரேட், மணிக்கூண்டு, கொல்லம்பாளையம், காளைமாட்டு சிலை, சூரம்பட்டி நால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இதில், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதாக 2,326 வழக்கு, சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 28 வழக்கு, செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிதயாக 19 வழக்கு, டூவீலரில் மூவர் சென்றதாக 94 வழக்கு, போக்குவரத்து சிக்னலை மீறியதாக 52 வழக்கு, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 18 வழக்கு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியதாக 39 வழக்கு, இதர வழக்குகள் 250 என 2,833 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.2லட்சத்து 20ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu