அந்தியூரில் போலீஸ்காரர்-மீன் வியாபாரி கைகலப்பு: கற்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு

அந்தியூரில் போலீஸ்காரர்-மீன் வியாபாரி கைகலப்பு: கற்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு
X

கைகலப்பு (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போலீஸ்காரர் - மீன் வியாபாரி இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூரில் போலீஸ்காரர் - மீன் வியாபாரி இடையே கைகலப்பு ஏற்பட்டு கற்களால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்திபாளையத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 37). மீன் வியாபாரியாக இவர் தவுட்டுப்பாளையத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். கடம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சதீஸ்குமார் (35). இவருக்கும் பூபதிக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சதீஸ்குமார் பூபதியின் கடை அருகே நின்றுகொண்டு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், பூபதியும், சதீஸ்குமாரும் மாறி, மாறி அந்தியூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி