ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் ரயில்களில் அடிபட்டு 98 பேர் உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு (மாதிரிப் படம்).
ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்குள் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் ரயில்களில் அடிபட்டு 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது:-
மாவேலிபாளையம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி, காவிரி, சங்ககிரி, ஆனங்கூர், ஊஞ்சலூர், கொடுமுடி, சாவடிப்பாளையம், பாசூர் ஆகிய 10 ரயில் நிலையங்கள் ஈரோடு ரயில்வே காவல் நிலைய போலீசாரின் எல்லைக்குள் உள்ளன.
இந்நிலையில், ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2024ம் ஆண்டு ரயில்களில் அடிபட்டு 84 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 98 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதில், 71 பேர் அடையாளம் காணப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 10 பேர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். மீதம் உள்ளவர்களில் ஒரு சிலர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளனர்.
மற்றவர் கள் ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது உயிரிழந்துள்ளனர். எங்கள் எல்லைகளில் உள்ள ரயில் நிலையங்களில் வாரம்தோறும் ரயில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும், பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் வருகிறோம்.
இதன் காரணமாக, ஈரோடு ரயில்வே காவல் நிலையங்களின் எல்லைக்குள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த எண்ணிக்கை, வரும் ஆண்டுகளில் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu