கீழ்வாணி ஊராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கீழ்வாணி ஊராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
X

கோப்பு படம்

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (7ம் தேதி) ஆதார் சிறப்பு முகாமை கீழ்வாணி ஊராட்சி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் குழந்தைகளுக்கு ஆதார் புதிதாக எடுக்க, பெரியவர்களுக்கு ஆதார் திருத்தம், முகவரி மாற்றம், பிழை திருத்தம் செய்ய கீழ்வாணி ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவர் செல்விநடராஜன் , துணைத்தலைவர் பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!