அந்தியூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: ஒருவர் கைது

அந்தியூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட சக்திவேல்.

அந்தியூர் சுடுகாடு அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சிவசக்திநகர் பின்புறம் உள்ள சுடுகாடு அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, அந்தியூர் காவல் ஆய்வாளர் மோகன்ராஜுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், அப்பகுதியில் இன்று காலை, உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில், தேர்வீதியை சேர்ந்த சக்திவேல் 52 என்பதும், சட்ட விரோதமாக தமிழக மதுவை விற்பனை செய்வதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதை தொடர்ந்து, அவர் மீது சட்ட விரோதமாக மது விற்பனை செய்யததற்காக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai powered agriculture