கோபி அருகே சட்டவிரோதமாக மதுவிற்றவர் கைது

கோபி அருகே சட்டவிரோதமாக மதுவிற்றவர் கைது
X
பைல் படம்
கோபிசெட்டிப்பாளையம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால்ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாய்க்கால்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!