கோபிசெட்டிபாளையத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

கோபிசெட்டிபாளையத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
X
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டையை வழங்கிய கோபி நகரத்தலைவர் நாகராஜ்.
கோபிசெட்டிபாளையத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் வழங்கும் முகாம் நடைபெற்றது

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபார சான்று வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கோபி நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில், நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், 135 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, 41 புதிய சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பம் அளித்தனர். நிகழ்ச்சியில், கோபி நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம், நகர் அமைப்பு அலுவலர் சேகர், துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், நகர் மன்ற துணைத்தலைவர் தீபா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு