ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
X

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொதுப்பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த 4-ம் தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் பல்வேறு அரசியில் கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் குவிய தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. 8-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்களாக இரண்டு பேரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர்களாக ராஜ்குமார் ஐஏஎஸ் , காவல் பார்வையாளராக மேற்கு வங்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் ஐபிஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் பிப்ரவரி 7-ம் தேதி முதல் பார்வையாளர்களாக செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!