அந்தியூர் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி

அந்தியூர் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  பயிற்சி
X
திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் 
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசின் சார்பில் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில்சென்னை கலைவாணர் அரங்கத்தில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நான் முதல்வன் திட்டத்தின் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி, நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!