அந்தியூர்: காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் புகார்

அந்தியூர்:  காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் புகார்
X

காணாமல் போன ஷோபனா.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூரில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் புகார் அளித்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தேவராசு (வயது 36). இவரது மனைவி ஷோபனா (வயது 26). இவர்களுக்கு கனிஷ்கர்(4) மற்றும் கவிசெல்வன்(3) இரு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் அண்ணமார்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஷோபனா சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், தேவராசு அளித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன ஷோபாவை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி