கோபிசெட்டிபாளையம் அருகே சாலை விபத்தில் ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலை விபத்தில் ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு
X

ராஜேந்திரன்

கோபிசெட்டிபாளையம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டல் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மேட்டுவலவுவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இரவு நேர ஓட்டல் கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் மொபட்டில் மொடச்சூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பூரணசந்திரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future