அந்தியூர் அருகே சாக்கடையில் சிக்கித் தவித்த குதிரை மீட்பு

அந்தியூர் அருகே  சாக்கடையில் சிக்கித் தவித்த குதிரை மீட்பு
X

அந்தியூர் அருகே உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகில் சாக்கடையில் சிக்கித் தவித்த குதிரையை படத்தில் காணலாம்.

அந்தியூர் அருகே உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகில் சாக்கடையில் சிக்கித் தவித்த குதிரையை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் அருகில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இன்று மாலை சாக்கடை கால்வாயை கடந்து செல்ல முற்பட்ட குதிரை ஒன்று, தடுமாறி சாக்கடை கால்வாய் சேற்றில் சிக்கிக் கொண்டது.சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேற முடியாமல் சத்தமிட்ட குதிரையை மீட்க அப்பகுதி பொதுமக்கள் முயற்சி செய்தனர். மேலும் அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், குதிரையின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் கயிற்றைக் கட்டி மேலே இழுத்து மீட்டனர்.சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட குதிரை துள்ளிக்குதித்து அப்பகுதியை விட்டு ஓட்டம் பிடித்தது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!