ஈரோடு மாவட்டத்தில் ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில் காவிரியில் நீராட தடை
காவிரியில் புனித நீராட தடை (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழுள்ள காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள கீழ்கண்ட திருக்கோயில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையினை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பவானி, சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில், காங்கேயம்பாளையம், நட்டாட்ரீஸ்வரர் கோயில், நஞ்சைகாளமங்கலம், மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் குலவிளக்கம்மன் கோயில், அம்மாபேட்டை சொக்கநாதசுவாமி கோயில், ஊஞ்சலூர், மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நஞ்சை கிளாம்பாடி கைலாசநாதர் கோயில் மற்றும் காவிரி ஆற்றங்காரையின் அருகே உள்ள சிறிய கோயிலுக்கு வரும் பக்கதர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஆகஸ்ட் 3, 4ம் தேதிகளில் ஆடி பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu