கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்து மக்கள் கட்சி உண்ணாவிரத போராட்டம்

கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்து மக்கள் கட்சி உண்ணாவிரத போராட்டம்
X

அர்ஜூன் சம்பத். 

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பாக வரும் 26-ம் தேதி பாரியூர் கோவில் முன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இந்து மக்கள் கட்சி மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் கூறியதாவது: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை விதிகளின்படி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கவும், தேர்த்திருவிழாவையும் நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பாக வரும் 26-ம் தேதி பாரியூர் கோவில் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில், கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி