பவானிசாகர் அருகே இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம்

பவானிசாகர் அருகே இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

பவானிசாகர் அருகே கிறிஸ்தவ ஆலயத்தை இடித்து அப்புறப்படுத்த கோரி இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் மேட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயமானது, வீடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்ட இடத்தில் ஆலயம் கட்டியதாக, தனிநபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் நீதிமன்றம் ஆலயத்தை இடித்து அகற்ற கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை பணி நடைபெறவில்லை என கூறி, சத்தியமங்கலம் இந்து முன்னணியினர் குருசாமி தலைமையில், தொப்பம்பாளையம் - மேட்டுப்பாளையம் சாலையில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்து, அங்கு வந்த சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் ரவிசங்கர் மற்றும் பவானிசாகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!