பங்களாப்புதூர் போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணியினர் தர்ணா

பங்களாப்புதூர் போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணியினர் தர்ணா
X

தர்ணாவில் ஈடுபட்ட இந்து முன்னணியினர். 

பங்களாப்புதூர் போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே மத்தளகொம்பு என்ற இடத்தில் சில நாட்களுக்கு முன்பு விநாயகர் கோவில் குளத்தில் சிலர் இறைச்சி சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணியினர் ஏராளமானோர் பங்களாப்புதூர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் மற்றும் பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அங்கு சென்று, இந்து முன்னணியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதை ஏற்றுக் கொண்ட இந்து முன்னணியினர் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!