தகாத வார்த்தை பேசிய நெடுஞ்சாலைதுறை பொறியாளர் கைது

கைது செய்யப்பட்ட சந்திரா.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குள்ளம்பாளையம், எஸ். பி. நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சந்திரா(வயது 55). இவர், நெடுஞ்சாலைத்துறையில் உதவிப் பொறியாளராக கடலூரில் பணியாற்றி வருகிறார். இவரது தாத்தா கிருஷ்ணன், சித்தப்பா குழந்தைவேலுக்கு மூன்றரை ஏக்கர் நிலத்தை கடந்த 1999 ஆண்டு உயில் எழுதி வைத்துவிட்டார்.
இதுதொடர்பாக, பவானி உரிமையியல் நீதிமன்றத்தில் 2013-ம் வருடம் சந்திரா, அவரது தந்தை பாட்டப்பன் ஆகியோர் வழக்கு தொடர்ந்ததில் சித்தப்பா குழந்தைவேலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த சந்திரா, தனது தந்தை பாட்டப்பனுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது, பலமுறை நீதிமன்றத்திற்கு வந்த இவர், நீதிமன்ற ஊழியர்களை பணி செய்ய விடாமல் தகாத வார்த்தையில் பேசுவதும், நீதிமன்ற ஊழியர்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதும், மிரட்டுவதாக இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து, பவானி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் எஸ். சாந்தி, பவானி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்திராவைக் கைது செய்து கோவை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu