திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்: வாகனங்கள் திணறல்

திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்: வாகனங்கள் திணறல்
X

கடும் பனி மூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்ற வாகனங்கள்.

திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன.

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த திம்பம் மற்றும் ஆசனூர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதேபோல் கடும் பனிமூட்டமும் காணப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்தது.

குறிப்பாக 27-வது கொண்டை ஊசி வளைவு முதல் 15-வது கொண்டை ஊசி வளைவு வரை பனிமூட்டம் அதிக அளவில் இருந்தது. இதன்காரணமாக வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை திம்பம் மலைப்பகுதியில் இயக்கினர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்