ஈரோடு மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவு: பொதுமக்கள் அவதி

ஈரோடு மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவு: பொதுமக்கள் அவதி
X

ஈரோடு மாவட்டத்தில் நிலவிவரும் பனிப்பொழிவு.

ஈரோடு மாவட்டத்தில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன், தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த மழை காரணமாக மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. இதனைத்தொட ர்ந்து மழை பெய்வது குறைந்தது. ஆனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

மேலும் பனி மூட்டமும் மாவட்டம் முழுவதும் காணப்பட்டு வருகிறது. இதனால் கடும் குளிரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள வனப்பகுதிகளான தாள வாடி, கேர்மாளம், ஆசனூர், பண்ணாரி, தலமலை உள்பட பல்வேறு கடும் பனி மூட்டமாக இருந்து வருகிறது. இந்த பனி மூட்டம் காரணமாக தாளவாடி வனப்பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வருகிறது.

பொதுமக்கள் வெளியே வரவும், அதிகாலையில் வேலைக்கு செல்வோரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பலர் ஸ்சுவட்டர், குல்லா அணிந்த படியே வருகிறார்கள். மேலும் வனப்பகுதி களில் கடும் பனிப் பொழிவு பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டப்படியே செல்கிறார்கள். மேலும் கோபிசெட்டி பாளையம், நம்பியூர், சென்னிமலை, பெருந்துறை, கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இன்று காலை வரை கடும் பனி பொழிவு நிலவி வருகிறது.

அதே போல் அந்தியூர் அடுத்த பர்கூர், தாமரை க்கரை, தட்டக்கரை போன்ற மலைப்பகுதியில் இன்று காலை பனி பொழிவு காரண மாக கடும் குளிர் வாட்டியது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். இந்த பனியால் குளிர் வாட்டி வதைத்து வருவதால், பெரும்பாலான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளும் கடும் குளிரால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!