சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்!

சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்!
X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளையத்தை சுற்றியுள்ள கரளயம், ஏலஞ்சி, காடகநல்லி, எக்கத்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் திப்பநாயக்கனூர் எக்கத்தூர் பள்ளத்தில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடம்பூர்- மாக்கம்பாளையம் செல்லும் வழியில் சர்க்கரை பள்ளம், குறும்பூர் பள்ளங்களிலும் மழை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் காடகநல்லி எக்கத்தூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக "ஆரேதள்ளம்" பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து மாக்கம்பாளையம் - கோம்பையூர் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால் மாக்கம்பாளையம் கோம்பைதொட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story