அந்தியூர் அருகே குடியிருப்புக்குள் சூழ்ந்து நின்ற மழைநீர்

அந்தியூர் அருகே குடியிருப்புக்குள் சூழ்ந்து நின்ற மழைநீர்
X
அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த கன மழையால், இரண்டாவது நாளாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தெப்பக்குளம் வீதியில் தாழ்வான குடியிருப்பு பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது.

இதில் அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான எண்ணமங்கலம், செல்லம்பாளையம், வட்டக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.


இதில், செல்லம்பாளையம் மேலூர் பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்து தேங்கி நின்றது. ஒரு சில வீடுகளில் தேங்கிய மழைநீரால் வீட்டிலுள்ள பொருட்கள் சேதமடைந்தன. இதில், செல்லம்பாளையம் மேலூர் பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்து தேங்கி நின்றது.

ஒரு சில வீடுகளில் தேங்கிய மழைநீரால் வீட்டிலுள்ள பொருட்கள் சேதமடைந்தன.இதேபோல், வட்டக்காடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, விவசாய விளை நிலங்களுக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. பாதிக்கப்பட்ட செல்லம்பாளையம் மேலூர் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், மழைநீர் வெளியேறவும் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!