கோபி அருகே சூறைக்காற்றுடன் மழை: வேருடன் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

கோபி அருகே சூறைக்காற்றுடன் மழை: வேருடன் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!
X
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சூறைக்காற்றுடன் மழை பெய்து, வேருடன் மரம் சாய்ந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோபி அருகே சூறைக்காற்றுடன் மழை பெய்து, வேருடன் மரம் சாய்ந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதூர், வாணிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதல் வழக்கம் போல் வெயில் வாட்டியது.

பின்னர், மாலை 4 மணி அளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதை தொடர்ந்து, மிதமான சாரல் மழை பெய்தது. இதனால், வாணிப்புத்துார்- கொங்கர்பாளையம் சாலையில் இருந்த பழமையான அரசு மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. அதைத் தொடர்ந்து, மரக்கிளை பட்டதில் அறுந்த மின் கம்பிகளை, மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.

Next Story
ai in future agriculture