சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை

சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை
X

நீரில் மூழ்கிய தரை மட்ட பாலம்.

சத்தியமங்கலத்தில் இன்று பெய்த பலத்த மழையால், பவானிசாகர்-சத்தியமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, வடவள்ளி சிக்கரசம்பாளையம், அரியப்பம்பாளையம், பண்ணாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பலத்தமழை காரணமாக சத்தியமங்கலம்-பவானிசாகர் சாலையில் மாரனூர் என்ற இடத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் சாலையில் தரை மட்ட பாலம் மூழ்கியது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!